தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடலுக்கு சென்று விசைப்படகு மூலம் மீன்பிடிக்க கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்கள் அனுமதி கொடுக்க கூடாது என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் விசைப்படகில் அதிக அழுத்தம் கொண்ட மோட்டார் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் தங்கள் மீனவர்களுக்கும், படகு மற்றும் வலைகளுக்கு சேதம் ஏற்படும் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னக்காயல், பெரியதாழை உள்பட 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் அனைத்து நாட்டுப்படகுகளும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.