
சாத்தான்குளத்தில் வாலிபரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் கண்ணன் (18). இவர் பெங்களுரில் உள்ள மிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் ஊருக்கு வந்தவர் வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் சாத்தான்குளம் பள்ளிக்கு வந்த புதுக்குளத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கண்ணன் செல்போன் நம்பரை கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று கண்ணன் சாத்தான்குளம் பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத 4பேர் அவரை தாக்கி அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார். இதுகுறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குபதிந்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகிறார்.