வல்லநாட்டில் கலைஞர் மறைவையொட்டி 16 பேர் மொட்டை போட்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
வல்லநாட்டில் கருணாநிதி மறைவை யொட்டி முழு கடை அடைப்பு நடத்தப்பட்டு, கழக கொடி அரைகம்பத்தில் ஏற்றப்பட்டது. அதன் பின்பு அவர் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கருங்குளம் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுடலை பாண்டியன் தலைமையில் கோடையடி முருகன், லாலா சுப்பிரமணியன், வெங்கடசுப்பு, காசி விஸ்வநாதன், சு. மகாராஜன், முத்துராமலிங்கம்,
ரமேஷ், பூலுடையார், எம்.ஏ. மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாலை 5 மணி அளவில் மௌன ஊர்வலம் நடந்தது. சுமார் 16 பேர் மொட்டை யிட்டு கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
கருங்குளத்தில் உடையார் தலைமையில் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாலை வேல்முருகன், சுடலை மணி உள்பட ஏராளமானவர்கள் இதில் கலந்துகொண்டனர். மாலை மௌன ஊர்வலமும் நடந்தது.


