
வல்லநாட்டில் எலக்ட்ரிசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வல்லநாடு வேதக்கோயில்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சுரேஷ்(27). இவர் எலக்ட்ரிசன் வேலை பார்த்து வருகிறார். தனியாரிடமும், கருங்குளம் கூட்டு குடிதண்ணீர் திட்டத்திலும் அவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள் 1 சகோதரி ஆவார். சுரேஷ் திருமணம் ஆகாமல் இருந்தார். நேற்று இவர் தனியாக ஒரு அறையில் ஓய்வெடுக்க சென்றவர். அங்கேயே தூக்கிட்டு இறந்தார். அதிகாலையில் வீட்டுக்குள் சென்று பார்த்த ராமசாமி, இதுகுறித்து முறப்பநாடு போலிசில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெகடர் வேல்ராஜ் சுரேஷ் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சுரேஷ் ஏன் இறந்தார். என்ன பிரச்சனை என போலிசார் விசாரித்து வருகின்றனர்.