வல்லநாடு ஆவுடையம்மாள் சமேத திருமூலநாதர் கோயிலில் உழவாரப்பணி நடந்தது.
தூத்துக்குடி சிவ தொண்டர்கள், திருமூலநாதர் மகளிர் பக்த பேரரவை சார்பில் நடந்த உழவாரப்பணிக்கு திருப்பணி குழு தலைவர் அய்யன் பிள்ளை தலைமை வகித்தார். கோயிலில் சுற்றி அடர்ந்த புதர் போல் காணப்பட்ட இடங்களை பக்தர்கள் துப்புறவு செய்தனர்.
மதில் மேல் வளர்ந்த செடிகளை அகற்றினர். தொடர்ந்து சிவன் அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கும் சிறப்புஅபிசேகமும் நடந்தது. கைலாச வாத்திய குழுவினரின் வாத்தி குழுவின் இசையில் நந்தியம் பெருமான் வாகனத்தில் வலம் வந்தார். இதற்கான ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் சண்முக சுந்தர பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.