வல்லநாடு பாரதி மழலையர் துவக்கப்பள்ளியில் தொழு நோய் சிகிச்சை முகாம் நடந்தது.
கருங்குளம் ஒன்றிய உதவி வட்டார வளர்ச்சி அதிகாரி கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சுந்தரி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட தொழுநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் யமுனா தோல் நோய் தொடர்பான பல்வேறு வியாதிகளுக்குச் சிகிச்சையளித்தார்.
முகாமில் வல்லநாடு மற்றும் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். மாவட்ட நலக் கல்வியாளர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி மருத்துவமில்லாப் பணிகள் மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் உடற்பயிற்சியாளர் மதனா ஆய்வக நுட்பனர் சங்கர் சுகாதார மேற்பார்வையாளர் ஜாகிர் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளைப் பாரதி மழலையர் துவக்கப்பள்ளித் தாளாளர் ரத்னா சங்கரலிங்கம் ஆசிரியைகள் தம்புராட்டி, குமார செல்வம், முத்துலட்சுமி, இசக்கிம்மாள் செய்திருந்தனர்.