வல்லநாடு ஆவுடையம்மன் சமேத திருமூலநாதர் ஆலயத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது. வல்லநாடு பாரதி பள்ளி நிறுவனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். சேதுராமலிங்கம், சக்கரபாணி கைங்கர்ய சபா சுப்பிரமணியன், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றியும், செங்கற்களை அப்புற படுத்தியும் ஆலய வளாகத்தில் உள்ள தென்னை மரங்களை அகற்றியும் தூய்மை படுத்தினர். நந்தவன தோட்டம் அமைக்க ஏற்பாடுகளை செய்தனர். இதில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி இரண்டாம் ஆண்டு நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை திட்ட அலுவலர் முனைவர் ராஜாபாபு செய்திருந்தார்.


