வல்லநாடு காசநோய் பிரிவு 6-ஆம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தாஜீ தலைமை வகித்தார். மாவட்ட நலக்கல்வியாளர் தங்கவேல், சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார், உதவி மருத்துவ அலுவலர் கிருத்திகா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
செவிலியர் சரவணகுமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் காசநோய்க்கு மருந்து அளித்த தன்னார்வ உறுப்பினர்களுக்கு அரசின் ஊக்கத் தொகை தலா ரூ.1,000- காசோலையாக வழங்கப்பட்டது. சுகாதார பணியாளர் வேம்பன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டம், வல்லநாடு காசநோய் பிரிவின் சார்பில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.