வல்லநாடு அருகே ஆறாம்பண்ணை வேதக்கோயில் தெருவை சேர்ந்த விறகு வியாபாரி பால்ராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (55). பீடிசுற்றும் தொழில்செய்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தை மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளன. இவருக்கும் இவரது மகன் ஆட்டோ டிரைவர் ராஜ்குமாருக்கு (30) ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்களாம்.
இன்று மாலை 6 மணி அளவில் வீட்டு வந்த ராஜ்குமார், தனது தாயார் மாரியம்மாளை அரிவாளால் வெட்டினான். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை பாளை மேட்டுதிடல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராஜ்குமாரை தேடி வருகிறார்கள்.