வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் தாமிரபரணி புஷ்கர ஆரத்தி பெருவிழா நடந்தது.
ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மறு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்தந்த ராசிக்கு உரிய நதிகளுக்கு அந்த நதியை பாதுகாக்கும் பெருட்டும், தூய்மைபடுத்தும் விதமாகவும், கொண்டாடும் விதமாகவும் அந்த நதியை ஆராதிப்பது புஷ்கர திருவிழா.
இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு அக்டோபர் மாதம் இடப்பெயர்ச்சி அடைகிறார். எனவே ராசியின் அதி தேவதையாக விளங்கக்கூடிய நதியான தாமிரபரணிக்கு பத்து தினங்கள் தாமிரபரணி மகா புஷ்கர திருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 144 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மகா புஷ்கரம் திருவிழாவாகும்.
இதை முன்னிட்டு தட்சிண கங்கையான தாமிரபரணியின் பிறந்த தினமாக வைகாசி விசாக இன்று மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை முறப்பநாடு மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில் படித்துறையில் அன்னை தாமிரபரணி மாதாவிற்கு எல்லா வகையான அபிஷேகங்களும் மகா அபிசேகமும், மகா ஆரத்தியும் நடைபெற்றது. இதற்கான சிறப்பு கும்ப அலங்காரம் நடந்தது. அதன்பின் தாமிரபரணி ஆற்றில் 21 வகையான அபிசேகம், அதன் பின் தீர்த்த அபிசேகம், மகா தீப ஆராத்தி நடந்தது. தாமிரபரணி ஆற்றில் பொறி போட்டு மக்கள் வணங்கினர். இதில் சாதுக்கள் பலர் கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை முறப்பநாடு ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.


