வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா
தலைமை ஆசிரியை இவாஞ்சலின் கிளாரன்ஸ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மோகன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன் பாதர்வெள்ளை, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நங்க முத்து, சமூக ஆர்வலர்கள் வடிவேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜெயராமன் குடியரசு தினவிழா உரையை நிகழ்த்தினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.