வல்லநாடு அருகே லாரி தீப்பற்றி எரிந்த காரணத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.
வல்லநாடு அருகே உள்ள மணககரையில் இருந்து தும்பு ஏற்றி கொண்டு லாரி ஒன்று தூத்துககுடி நோக்கி சென்றது. இந்த லாரியை பத்பநாபமங்கலத்தினை சேர்ந்த கொம்பையா(35) என்பவர் ஓட்டி வந்தார். லாரி முருகன்புரம் விலக்கு அருகில் சென்ற போது எதிர்பாரத விதமாக தீப்பற்றியது. உடனே டிரைவர் கொம்பையா இறங்கி தீயை அணைக்க முயற்சி செய்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் முறப்பநாடு இன்ஸ்பெகடர் விஜயகுமார், சப்இன்ஸ்பெகடர் வேல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தினை சீர்செய்தனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைக்கும் படை வீரர்கள் தீயை அணைத்தனர். அதிஷ்டவசமாக லாரி தப்பியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.