வசவப்பபுரம் முதியோர் கருணை இல்லம் 12ஆம் ஆண்டு துவக்கவிழா மற்றும் வடக்கு வெட்டியபந்தி இந்திய தேவ சபை 21 ஆம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.
வடககு வெட்டியபந்தி இந்திய தேவ சபையில் வைத்து நடந்த விழாவிற்கு சின்னம்மா ஆபிரகாம் தலைமை வகித்தார். தூத்துக்குடி நெல்லை மாவட்ட இந்தி தேவ சபைகளின் போதகர்கள் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாகடர் நிர்மல்குமார், சிவந்திப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் செல்வி, முறப்பநாடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அரியலூர் காட்டுபுறாவின் சத்தம் ஊழியங்கள் பாஸ்டர் வெஸ்லி சிறப்பு செய்தி அளித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேவ சபையின் பேராயர் டைட்டஸ் ஞானசித்தர் தலைமையில் சபையினர் செய்திருந்தனர்.