வசவப்பபுரத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ச.ம.க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருங்குளம் வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் வசவப்பபுரம் இந்திரா காலனியில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் வசவை முருகன் தலைமை வகித்தார். துணை செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வில்சன் சிறப்புரையாற்றினார். வசவப்புரம் நாலு வழிசாலையில் உள்ள பஸ் நிலையத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வசவப்பபுரம் இந்திரா காலனி தெருகளில் சாலை அமைக்க வேண்டும், சென்னல்பட்டி முக்கவர் சாணலில் ஆரம்பித்த வேலையை பொதுப்பணித் துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர். அந்த வேலையை மீண்டும் துவங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமல்ராஜ், மாணவரணி மாரிசுந்தர், துணை செயலாளர் முத்துகுமார், பொருளாளர் இளையராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவை தலைவர் சடகோபாலன் நன்றி கூறினார்.


