
வசவப்பபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்வதற்காக நெல்லை & தூத்துக்குடி வழித்தட போக்குவரத்தை 1 மணி நேரம் மாற்றம் செய்தனர். இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
ஒட்டபிடாரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து வாக்கு சேகரிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசவப்பபுரம் வந்தார். அவரை திரளான மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அவர் பேசியதாவது. இந்த தேர்தல் வர யார் காரணம் என்பது உங்களுக்கு தெரியும். அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும் என மூளை சலவை செய்த காரணத்தினால் இப்பகுதி எம்எல்.ஏ பதவியிழந்தார். அவர் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் உழைப்பில் வெற்றி பெற்றவர். ஆனால் அவர்களையெல்லாம் மறந்து விட்டார். மக்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்,அவர் சுயநலத்துக்காக பதவி இழந்தார். அம்மா அவர்களால் 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர் டி.டிவி தினகரன் . ஆனால் அவர் அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும் என திட்டம் திட்டி, திமுகவோடு இணைந்து செயல்படுகிறார். இருவரும் எதிரிபோல் நடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ அதிமுக வெற்றி பெறகூடாது என செயல்படுகிறார்கள். அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். உடலும் உயிரும் போல அதிமுகவும் இரட்டை இலையும் பிரிக்க முடியாதது. ஆனால் டி.டி.வி.தினகரன் உச்ச நீதி மன்றத்தில் போய் இரட்டை இலை சின்னத்தினை முடக்க பார்த்தார். முடியவில்லை. இதுபோன்ற துரோகிகள் உங்களிடம் வாக்கு சேகரிக்க வாருவார்கள். அவர்களை தோற்கடிக்க வேண்டும்.
இந்த அரசு விவசாயத்தின் மீது அக்கறை கொண்ட அரசு எனவே தான் குடிமராமத்து திட்டத்தினை அறிவித்துள்ளோம். 1000 கோடி ரூபாயில் நீர் மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்தினோம். சொட்டு நீர் பாசனத்தினை மானிய கழிவும் விவசாயிகளுக்கு கொடுத்தோம். தேர்தல் வந்தால் எந்த உத்தரவும் போட முடியாது என்பதற்காக கோடை காலத்தில் விவசாயிகளுக்கு வாழை சாய்ந்தால் இழப்பீடு கொடுங்கள் என முன்பே கோப்பில் கையெழுத்து இட்டு விட்டோம். அது மட்டுமல்லாமல் வறட்சியின்பிடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகளுக்கு காப்பிட்டு திட்டம் இந்தியாவில் அதிக அளவு தமிழ்நாடு அரசு தான் பெற்று விவசாயிகளுக்கு கொடுத்துள்ளது. ஏழை எளியவர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பை 150நாள்களாக உயர்த்த மத்திய அரசுடன் பேசி அனைத்து நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழ் நாட்டு மக்களுக்கு தைபொங்கலுக்கு 1000 ரூபாய் கொடுத்த அரசு, விவசாய தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் வழங்க ஆவண செய்தோம். அதை திமுக வழக்கு தொடுத்து நிருத்தியது. ஆனாலும் தேர்தல் முடிந்தவுடன் அந்த பணம் கிடைக்க ஆவண செய்யப்படும். அனைவருக்கும் இலவச வீட்டு மனை, வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரிட் வீடு, 100 யூனிட் இலவச மின்சாரம், தனியார் மருத்துவ மனை சிகிச்சை பெற 2லட்சம் என்ற தொகை 5 லட்சமாக மாற்றியது. தாலிக்கு தங்கம். பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க 25 ஆயிரம் மானியம். மடிகணிணி தற்போது 39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 லட்ச பேருக்கு வழங்கப்பட உள்ளது. ஒட்டபிடாரத்தில் தற்போது நிறுத்தப்பட்ட அதிமுக வேட்டபாளர் மோகன் பண்பானவர். மக்களுக்காக சேவை செய்யகூடியவர். எந்த திட்டம் என்றாலும் உடனே செய்து முடிக்க கூடியவர். எனவே அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் என்று அவர் பேசினார்.
அவருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜி, மணிகண்டன், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் சண்முக நாதன், சி.த.செல்லப்பாண்டியன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
துளிகள்
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பெயரை கூறும் போது கிருஷ்ண மூர்த்தி என கூறி விட்டனர். இதனால் புதிய தமிழகம் கட்சியினர் கூச்சலிட்டனர்.
துளிகள்&2
குட்டைகால் குளம், முத்தாலங்குறிச்சி குளம், செய்துங்கநல்லூர் குளம், நாட்டார்குளம், கருங்குளம் உள்பட குளங்கள் தூர் வாரப்பட்டதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் கடந்த மே மாதம் முக்கவர் சானலில் துவங்கிய இந்த பணியை ஒப்பந்தகாரர் பாதியிலேயே கிடப்பில் போட்டு விட்டு சென்றுவிட்டார். இதனால் பல ஷட்டர்கள் போடாமல் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் வேதனையில் இருந்தனர். ஆனால் முதல்வர் பணி முடிந்தது என்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.