
வசவப்பபுரத்தில் நடந்த மின்னொளி கபாடி போட்டியில் குலுக்கல் முறையில் மணப்படை அணி வெற்றி பெற்று கோப்பையை கைபற்றியது..
வசவப்பபுரம் சாணக்யன் கபாடி குழு நடத்திய தென்மாவட்ட அளவிலான மாபெரும் 52 வது மின்னொளி கபாடி போட்டி அலங்காரசெல்வி அம்மன் கோயில் திடலில் நடந்தது.
கருங்குளம் ஒன்றிய அதிமுக அம்மா அணி செயலாளர் சிவசுப்பிரமணின் தலைமை வகித்தார். வேலன்குளம் கண்ணன், கருப்பசாமி என்ற சந்திரன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தார். அதிமுக அம்மா அணி ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ் போட்டியை துவங்கி வைத்தார்.
போட்டியில் 87 அணிகள் மோதின. இறுதி போட்டியில் 10 அணிகள் களத்தில் இருந்த போது நீதிமன்றம் கொடுத்த நேரம் முடிவுக்கு வந்த காரணத்தினால் பரிசு குழுக்கள் மூலம் வழங்கப்பட்டது. கோப்பையை மணப்படை வீடு அணி பெற்று கொண்டது. வேலன்குளம் கண்ணன் கோப்பையை வழங்கினார். முதல் பரிசு 20 ஆயிரத்தினை அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் மூர்த்தி தேவர், இரண்டாம் பரிசு 15 ஆயிரத்தினை ஆழிகுடி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சந்திரன், மூன்றாம் பரிசு 12 ஆயிரத்தினை முன்னாள் கவுன்சிலர் பட்சி முருகன், நான்காம் பரிசு 10 ஆயிரத்தினை நெல்லை மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ரவி, 5 ஆம் பரிசு 8 ஆயிரத்தினை ஆழிகுடி மாயாண்டியும், 6 ஆம் பரிசு 6 ஆயிரம் ரூபாயை நெல்லை மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ஆரியா பாலசுப்பிரமணியனும் வழங்கினர்.
7 ஆம் பரிசு 4 ஆயிரம் ரூபாயை வசவப்புரம் முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் பொன்செல்லத்ரையும், 8 வது பரிசு 3 ஆயிரத்தினை வசவப்பபுரம் முருகனும், 9 வது பரிசு 2 ஆயிரத்தினை வசவப்பபுரம் சங்கரபாண்டியனும் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை சாணக்யன் கபாடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தினர்.