தூத்துக்குடி மாவட்ட எல்கையான வசவப்பபுரத்தில் இன்று (5.1.2018) இரவு 10.30 மணிக்கு டி.டி.வி தினகரனுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள டிடிவி தினகரன் எம்.எல்.ஏ இன்று (5.1.2018) இரவு வந்தார். அவரை மாவட்ட எல்கையான வசவப்பபுரத்தில் வைத்து கட்சியினர் வரவேற்றனர். கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சசிகலா புஷ்பா எம்.பி, மாவட்ட செயலாளர் ஹென்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியினர் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் திறந்த வேனில் அவர் ஏறி கட்சியினரை பார்த்து கைஅசைத்தார்.
நிகழ்ச்சியில் மணத்தி ரவி குமார், முருகன், நகர செயலாளர் பால்துரை, பெருங்குளம் சுடலை, மணக்கரை சீனி பாண்டியன், தாமிரபரணி திட்ட குழு சேர்மன் சூரி, அவை தலைவர் பிள்ளை முத்து, மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் மருதவிநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.