ஸ்ரீவைகுண்டத்தில் மோட்டார் மூலமாக தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்குரிய கடைகள், வீடுகளுக்கு சொத்து வரி, தண்ணீர் வரி மற்றும் கடைகளுக்கான வரிபாக்கிகளை இதுவரை கட்டாமல் வைத்திருப்பவர்கள் உடனடியாக பாக்கி வைத்திருக்கும் வரிகள் அனைத்தையும் தாமதமின்றி செலுத்திடவேண்டும்.
வீடுகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல் போன்றவற்றிற்கு குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் விதிமுறைகளை மீறி மின்மோட்டார்கள் மூலமாக தண்ணீரை உறிஞ்சி எடுத்தால் குடி நீர் இணைப்பு துண்டிக்கப்படும் . பேரூராட்சியின் கடைகளுக்கு வாடகை கட்டணத்தை பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக செலுத்தாவிட்டால் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு மறு ஏல நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.


