
தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர திருவிழா மிகச்சிறப்பாக நடந்து வருகிறது.
இங்குள்ள முறப்பநாடு, ஆழிகுடி, கருங்குளம், அகரம் ஆகிய பகுதியில் சிறப்பு ஆராதனை நடந்தது. முறப்பநாடு குரு தீர்த்தக்கட்டத்தில் நேற்று மிக அதிகமான பக்தர்கள் நீராடினார்கள். காலையில் சிறப்பு யாகம் நடந்தது. மாலையில் நதி ஆராத்தி நடந்தது. முறப்பநாடு அருகே ஆழிகுடியிலும் சிறப்பு யாகம் நடந்தது. இங்கு மண்ணால் உருவாககப்பட்ட சிவலிங்கத்துககு சிறப்பு அலங்காரம் நடந்தது. பின் ஆராதனை நடந்தது . தொடர்ந்து விளககு பூஜை நடந்தது. இதில் 108 பெண்கள் கலந்துகொண்டனர். பின் தாமிரபரணிககு தீப ஆராதனை காட்டப்பட்டது. அகரம் தசவதார தீர்த்த கட்டத்தில் நேற்று மாலை 6.00 மணியளவில் அன்னை தாமிரபரணி நதிக்கு அனைத்து அபிசேகமும் செய்து 6.45 மணியளவில் மங்கள ஆரத்தி தீபாரதனை செய்தனர்.
கருங்குளத்தில் நடந்த மகாபுஷ்கர தினவிழாவை முன்னிட்டு காலை யாக சாலை நடந்தது. மாலை நதிககு தீபாதரணை காட்டப்பட்டது.