முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் மிக அதிகமான பக்தர்கள் நீராட வருகின்றனர்.
இவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீரை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆனாலும் அந்த தண்ணீரை குளோரின் செய்யப்பட்ட குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட மருத்துவ குழுவினர் இங்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த குழுவில் சுகாதர மேற்பார்வையாளர் பெரியசாமி தலைமையில் சுகாதா ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசன், ஜாகீர் ஆகியோர் குடிநீர் ஆய்வு செய்தனர். மாவட்ட நலகல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மேற்பார்வையிட்டார். பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக கோயில் வளாகத்தில் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து உள்ளனர் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.