முறப்பநாடு பகுதியில் புஷ்கர திருவிழாவை முன்னிட்டு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நீராடினர்.
நேற்று அதிகாலை 6 மணிக்கே பக்தர்கள் நீராட வந்தனர் இதனால் காலையில் 9 மணிக்கு அன்னதான விநாயகர் கோயிலில் சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. அதன் பின் திருவாவடுதுறை ஆதின ஈசன மடத்தில் இருந்து நடராஜர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டார். அந்த ஊர்வலமாக யாகசாலை மண்டபத்துக்குள் சேர்ந்தது.. தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. தாமிரபரணி ஈஸ்வரம் அறநிலை துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
முறப்பநாடு கைலாசநார் புஷ்கரம் கமிட்டி சார்பில் திருவாவடுதுறை ஆதினம் ஈசான மடத்துக்கு எதிரில் யாகசாலை நடந்தது. நேற்று காலை கணபதி ஹோமம் உள்பட பல ஹோமம் நடந்தது.அதன் பின் மதியம் 12 மணிக்கு தாமிரபரணிக்கு கும்ப நீர் அபிசேகம் நடந்தது. தொடர் மாலை 5.30 மணிக்கு மீண்டும் சிறப்பு ஆராத்தி நதிக்கு காட்டப்பட்டது. மாலை 6.30 மணிக்கு தாமிரபரணி ஈஸ்வரம் அறநிலை துறை சார்பாக நதிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.
இதுபோலவே திரு ஆவளி பாறை தீர்த்தகரையான ஆழிகுடியில் புஷ்கர திருவிழா நடந்தது. மாரடிச்சான் சுடலை கோயில் அருகில் போடப்பட்ட யாகசாலையில் தீர்த்தம் பூஜைக்கு வைக்கப்பட்டது. இரண்டாம் நாளாக நேற்று காலை 6 மணிக்கு நதி தாமிரபரணிக்கு அபிஷேகம் , யாகவேள்விகள் , சங்கல்ப ஸ்நானம், தர்ப்பணம், தானங்கள், பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு நதிக்கு தீபாராதனை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
கருங்குளத்தில் புஷ்கர விழா கோலாகலத்துடன் துவங்கியது. கருங்குளத்தில் உள்ள வித்யா கணபதி ஆலயத்தில் இருந்து தாமிரபரணி அன்னை படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தாமிரபரணி ஆற்றில் யாக சாலை வளர்க்கப்பட்டது. முதலில் கணபதி ஹோமத்துடன் துவங்கிய யாக சாலை முடிந்த பின் நதிக்கு 21 வகையான அபிசேகம் நடந்தது. அதன் பின் பக்தர்கள் தாமிரபரணியில் ஸ்நானம் செய்தனர்.
முறப்பநாடு , ஆழிகுடி, கருங்குளம் பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் ஸ்நான் செய்தனர். குறிப்பிட்ட இடத்துக்கு மேலே செல்லககூடாது என்று அடையாள கயிறு கட்டப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை காவலோர படை வீரர்கள் காவலுக்காக குவிககப்பட்டுள்ளனர். முறப்பநாடு மற்றும் கருங்குளம் பகுதியில் காவலுக்காக படகு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
முறப்பநாடு, செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தினை சீர் செய்திருந்தனர்.