முத்தாலங்குறிச்சிகாமராசு எழுதி காவ்யா பதிப்பகம்(2009) வெளியிட்ட தலைத்தாமிரபரணி, விகடன் பிரசுரம் வெளியிட்ட தாமிரபரணி கரையினிலே (2010) ஆகிய நூல்களில் புஷ்கரதிருவிழா குறித்து எழுதியுள்ளார்.
சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளியில் நடந்த தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு விழாவில் வேளாக்குறிச்சி ஆதினம் குருமகா சன்னிதானம் பேசும் போது இந்த நூல் குறித்தும், எழுத்தாளர் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அய்யப்பன் அவர்களும், நெல்லை முத்தமிழ் அவர்களும் (காமராசு) என்னிடம் பேசினார்கள். இதற்கிடையில் நெல்லை டவுண் சோனா மகாலில் நடந்த அழியாபதி ஈஸ்வரர் ஆலய இசை வெளியிட்டு விழா நடந்தது. இக்கோயில் வரலாற்றை ஆரம்ப காலத்தில் எழுதிய ஸ்ரீவில்லிபுத்தூரான் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் எழுதியிருந்தார்கள். எனவே அவர்கள் இருவரையும் மேடையில் வேளாககுறிச்சி ஆதினம் வாழ்த்தி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மறக்க முடியாதது இந்த தருணம்.