
முத்தாலங்குறிச்சி சிவன் கோயிலில் உழவாரப்பணி நடந்தது. முத்தாலங்குறிச்சி சிவகாமி சமேத வீரபாண்டிஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையானது. இந்த ஆலயத்தில் கும்பாபிசேகம் நடைபெறாமல் பல ஆண்டுகளாக உள்ளது. இந்த ஆலயத்தில் திருப்பணி மற்றும் கும்பாபிசேகம் நடைபெற முதல் கட்டமாக உழவாரப்பணி நடந்தது. இந்த உழவாரப்பணியை கோவில்பட்டி அப்பர் அடிகளார் உழவாரப்பணி குழுவினர் செய்திருந்தனர்.
இவர்கள் கோயில் வளாகத்தினை சுத்தம் செய்து, வீரபாண்டிஸ்வரர், லெட்சுமி நரசிம்மர் ஆலயத்தினை வெள்ளையடித்தனர். பின் சிறப்பு அபிசேகம், அலங்காரம், பூஜை நடந்தது. இந்த பூஜையில் இந்து முன்னணி கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வேம்பன், ஞானவேல், நெல்லையப்பர், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அர்ச்சகர் சேகர் பூஜைகளை செய்தார்.
இதற்கான ஏற்பாடுகளை முத்தாலங்குறிச்சி சிவகாமி சமேத வீரபாண்டிஸ்வரர் கைங்கர்ய சபா செய்திருந்தனர்.