மாவட்ட சாம்பியன் ஷிப் கபடிப் போட்டியில் பங்கேற்க, சாத்தான்குளம் வட்டார அணியினர் முன்பதிவு செய்யலாம் என மண்டல அமெச்சூர் கபடி கழக ஒருங்கிணைப்பாளர்கள் க. வேணுகோபால், ஏ. பொன்னையா சாமுவேல் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடியில் வரும் மே மாதம் மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட அணியினர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதில் சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள கபடி அணியினர் தங்கள் அணியின் பெயரை அமெச்சூர் கபடி கழகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். வட்டத்தில் உள்ள கபடி அணியின் பெயர் மாவட்ட அளவில் பதிவு செய்யப்படும். ஒரு வீரர் இரு கிளப்புக்கு மட்டும் விளையாடலாம். ஒரே ஒன்றியத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். சிறந்த அணியினர், சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.பதிவு செய்த அணியினருக்கு பதிவு எண் வழங்கப்படும்.திறமையுள்ள கபடி வீரர்கள் மாநில அளவிலான போட்டிக்குஅழைத்துச் செல்லப்படுவர். அணி வீரர்களின் புகைப்படம் அவசியம். ஒரு அணிக்கு பதிவு கட்டணம் ரூ.500, அடையாள அட்டைக்கு ரூ.50 செலுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு 9080030140, 9443562276 ஆகிய செல்லிடப் பேசியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.