தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உள்ள மனோன்மணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சித் துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்து.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் சரவணன் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து கருத்தரங்கில் கலந்து கொண்டு பேரூரையாற்றினார். அதன்பின்னர் மாணவ மாணவிகளுடன் தோழன் போல் உடனிருந்து கலந்துரையாடினார். கல்லூரி மாணவிகள் ஏழை எளிய முதியோர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் உதவிகளை வழங்கினர்.
அப்போது மாணவ மாணவிகள் முன்னிலையில் உதவி ஆட்சியர் இவ்வாறு பேசினார்.
மாணவ மாணவிகளுக்கு கல்வி இன்றியமையாதது. கல்வியை மாணவ மாணவிகள் அற்பணிப்போடு பயில வேண்டும். அனைவரும் அரசு தேர்வுகள் எழுத வேண்டும். இன்று திறக்கப்பட்டிருக்கும் கண்காட்சியில் அரசு தேர்வுகள் எழுத பயன்படும் அனைத்து புத்தகங்களும் உள்ளது. அனைத்து படித்து மாணவ மாணவிகள் முன்னேற வேண்டும் என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.