மளவராயநத்தம் கிராமத்தில் துத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் கரும்பன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ரா.மாரியம்மாள் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கமுத்து வரவேற்றார்.
இயற்கை வேளாண்மை குறித்து ‘இயற்கை விவசாயி’ வசவப்பபுரம் கிருஷ்ணமுர்த்தி பயிற்சியளித்தார்.
வேளாண்மைத்தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள் கல்யாணி பேசினார்.
செந்தமிழ் அறக்கட்டளையின் ஆலோசகர் முனைவர். வே.ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் தென்கரை பெரியகுளம் துர் வாருதல், மடைகளைச் சீர் செய்தல் , இயற்கை வேளாண்மை கருத்தரங்கு நடத்துதல் , திரு வைகுண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் அமைந்துள்ள வாழைக கொள்முதல் நிலையத்தை விரைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆழ்வார்திருநகரி ராஜேந்திரன், செம்பூர் அற்புதராஜ், வல்ல நாடு தங்கபாண்டி, விவசாயிகள் நாதன், பூல் பாண்டி, செல்லையா, சுப்பையா, குமரேசன், பொன்னுசாமி, பழனி, கண்ணன், ஜெயராமன், பூல் பாண்டி, பெருமாள், நங்கையார் , கோகிலா, முத்துலட்சுமி, சீதா, பானு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
டிவிஎஸ் அறக்கட்டளை களப்பணியாளர் முகேஷ் நன்றி கூறினார்.


