மணிமுத்தாறு3 வது ரீச் கால்வாயில் போதிய தண்ணீர் இன்றி கருகும் பயிர்கள். தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேரகுளம் சுற்று பகுதியில் மணிமுத்தாறு பாசன குளங்கள் உள்ளன. மணிமுத்தாறு அணை பாசனம் 3 வதுரீச் மூலமாக இங்குள்ள சுமார் 20க்கு மேற்பட்ட குளங்கள் பாசன வசதி பெறுகிறது.
கீழ சிரியந்தூர் குளம், செம்பராபேரிகுளம், தெற்குகாரசேரி குளம், கிளாக்குளம், குருகால்பேரி குளம், வெட்டிகுளம், தீராத்தி குளம், இலுப்பைகுளம், சேரகுளம், வல்லகுளம், அரசர்குளம், மல்லல் புதுக்குளம், திருவரங்கபட்டி குளம், கோவை குளம், வசவப்பநேரி குளம் உள்பட பல குளங்கள் உள்ளன.
இந்த பகுதி மக்கள் முழுக்க முழுக்க மணிமுத்தாறு பாசனத்தினை நம்பியுள்ளனர். தற்போது மணிமுத்தாறு அணையில் 109 அடி தண்ணீர் உள்ளது. 80 அடிக்கு மேலே தண்ணீர் இருந்தால் மணி முத்தாறு 1 ,2,3,4 வது ரீச்சிக்கு தண்ணீர் திறக்க « வண்டும் என்பது அரசு விதி. கடந்த மாதம் 20 ந்தேதி இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கிடையில் மணிமுத்தாறு கால்வாய் தண்ணீர் திறந்தும் இந்தப் பகுதிக்கு போதிய தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே இந்த பகுதியில் மணிமுத்தாறு தண்ணீரை நம்பி சாகுபடி செய்த நெல் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.
இதனால் விவசாயிகள் மனமுடைந்து உள்ளனர்.
இது குறித்து முன்னாள் கவுன்சிலர் கோபால் கூறும் போது, கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக ஒரு மாதம் தண்ணீர் தற்போது எங்கள் பகுதி குளத்தில் இருந்தது. அதை நம்பி நாங்கள் பயிர் செய்ய ஆரம்பித்து விட்டோம். ஆனால் இது போது மானது அல்ல. எனவே மணிமுத்தாறு அணையை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரியிருந்தோம். முதல்வர் கடந்த 20 ந்தேதி தண்ணீர் திறந்துவிட்டார். ஆனால் மணிமுத்தாறு கால்வாய் 3 வது மற்றும் நான்காவது ரீச்சிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதற்கிடையில் முறைப்படி தண்ணீர் திறக்காவிடில் இந்த பகுதியில் நட்ட பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக 3வது மற்றும் 4 வது ரீச்சிக்கு தண்ணீர் விட வேண்டும் .
என்றுகூறினார்.
தற்போது 1 வது மற்றும் 2 வது ரீச் விவசாயிகள் மணிமுத்தாறு தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள். 80 அடி வரை தான் இங்கு தண்ணீர் திறக்க இயலும். எனவே கடை மடையில்இருந்து தண்ணீரை முறை வைத்து பெருக்கினால் மட்டுமே அனைத்து விவசாயிகளுக்கும் முறைப்படி தண்ணீர் கிடைக்கும். கருகும் பயிரை காப்பாற்ற முடியும் எனவே ஆவண செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.