அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கருங்குளம் ஒன்றிய மகளிர் தின கருத்தரங்கு நடந்தது.
மணக்கரை அம்மன் கோயில் முன்பு நடந்த கருதரங்குக்கு கிளை தலைவர் பிரேமா தலைமை வகித்தார். செயலாளர் மாரியம்மாள் முன்னிலை வகித்தார். மாதர் சங்க மாவட்ட தலைவர் குணேஷ்வரி, விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் அப்பாக்குட்டி ஆகியோர் பேசினர். மணக்கரை கிராமத்தில் 100 நாள் வேலையை முழுமையாக தரவேண்டும் என கேட்டு வருகிற 12 ந்தேதி செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் அனைவரும கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.