
பொத்தகாலன்விளையில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள பொத்தகாலன் விளையில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி இந்த விழாவை முன்னின்று நடத்தினார். இதில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் ஜெயக்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவியாக தையல் இயந்திரம், இலவச சேலைகள், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, புத்தகப்பை ஆகியவை வழங்கப்பட்டது.