முறப்பநாடு காவல் நிலையத்தில் பேரூந்து ரோந்து பணி செய்யும் காவலர்களுக்கு கேமரா வசதியை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி முத்தமிழ் வழங்கினார்.
கடந்த ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு பாஸ்கர் என்பவர் ஸ்ரீவைகுண்டத்தில் கொலை செய்யப்பட்டார். அதன் பின் தொடர்ந்து சாதி மோதல் ஏற்படாமல் இருக்க அப்போதைய எஸ்.பி. அஸ்வீன் கோட்டீஸ் ஏற்பாடில் பேரூந்து ரோந்து காவலர் பணி அமர்த்தப்பட்டனர். எஸ்.ஐ. ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் செய்துங்கநல்லூர், சேரகுளம், முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்துக்கு உள்பட்ட பேருந்துகளில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் குற்றம் குறைந்து வந்தது. மேலும் குற்றம் செய்பவர்களை உடனடியாக பிடிக்கவும் ஏதுவாக இருந்தது. மேலும் இந்த பணியை செம்மை படுத்தும் விதமாக 13 காவலர்களுக்கும் கேமரா வழங்கப்பட்டது.
எஸ்.பி . முரளி ரம்பா உத்தரவின் பேரில் கேமரா வழங்கும் நிகழ்சி முறப்பநாடு காவல் நிலையத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி முத்தமிழ் காவலர்களுககு கமரா வழங்கினார்.
இதுகுறித்து டி.எஸ்.பி முத்தமிழ் கூறும் போது, கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பேருந்துரோந்து காவல் இருப்பதால் சாதி மோதல் குறைந்துள்ளது. மேலும் கருங்குளத்தில் கடந்த மே மாதம் நடந்த பஸ் எரிப்பு குற்றவாளிகளை உடனே கண்டிபிடிக்கவும் ரோந்து காவலர் பிரசாத் உதவியாக இருந்துள்ளார். அவருக்கு ரிவார்டு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை பஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களிடம் கூறலாம். அவர்கள் குறைகள் உடனே தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.