
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்வளம் குறைந்த பகுதிகளை வளப்படுத்த தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை 2009ல் தமிழக அரசு கொண்டு வந்தது. 569 கோடி திட்ட மதிப்பீட்டில் 4 கட்ட கால்வாய் தோண்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதில் முதல் இரண்டு கட்ட கால்வாய் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள இரண்டு கால்வாய் பணிகள் நிறைவடைந்தால் தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதி குளங்கள் அணைத்தும் மழைக்காலங்களில் நிரம்பிவிடும். இதனால் உப்புநீராக உள்ள நிலத்தடி நீர் நல்ல சுவையுள்ள நீராக மாறும்.
எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வெள்ள நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொது மக்களும் கலந்துகொண்டனர்.