பெரியதாழை காணிக்கை மாதா திருவிழாவையொட்டி நற்கருணை பவனி நடைபெற்றது.
பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா ஜன. 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிப். 2ஆம் தேதி வரை நடைபெற்றது.
திருவிழாவில் ஒவ்வொரு நாளும் திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9ஆம் நாளான பிப். 1ஆம் தேதி மாலை பெருவிழா மாலை ஆராதனையும், 10ஆம் நாளான பிப். 2ஆம் தேதி காலை பெருவிழா புது நன்மை திருப்பலிலியும் மாலையில் நற்கருணைப் பவனியும் நடைபெற்றது. இதில், அருள்தந்தைகள் கலந்துகொன்டு திருப்பலிலி மற்றும் மரையுரை நடத்தினர்.
ஏற்பாடுகளை பங்குப் பணியாளர்கள் செல்வன் பர்னாந்து, பவுன்பாஸ், அருள்சகோதரிகள் ஊர்நலக் கமிட்டியினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.