
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கடலோரப் பகுதி. இந்த பெரியதாழையில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மீனவர்கள். இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்ட பைப்பர் படகு மூலம் தினமும் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து இந்த பகுதியை கடல் அலைகளில் இருந்து காப்பாற்றுவதற்காக தூண்டில் வளைவு அமைக்கும் பணி துவங்கியது. இந்நிலையில் தற்போது அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்தாக கூறி வேலை முடித்துச் சென்று விட்டனர். ஆனால் இன்னும் 800 மீட்டரில் தூண்டில் வளைவு அமைத்தால் மட்டுமே அலைகளில் சீற்றத்தில் இருந்து மீன்பிடி படகுகள், வீடுகளை காப்பாற்ற முடியும். இதனால் மீனவர்கள் தற்போது மீன்பிடி படகுகளை கரையில் விட இயலாமல் வீடுகளின் அருகில் விடும் பரிதாபம் நடைபெறுகிறது.
இந்நிலையில் முழுமையாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும் பட்சத்தில் ஏப்ரல் 23, 24ம் தேதியில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும், 25ம் தேதி தூத்துக்குடி&கன்னியாக்குமரி கிழக்கு கடற்கரை சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளனர்.