புலம்பெயர்ந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய இளைஞர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி சாத்தான்குளம் கருங்குளம் தூத்துக்குடி வட்டாரங்களை சார்ந்த 105 ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்பட்டு வருகிறது, ஊராட்சிகளில் கொராணா காலத்தில் ஏற்பட்ட முழு முடக்கத்தாள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மற்றும் உறுப்பினர் குடும்பங்களை சேர்ந்த புலம்பெயர்ந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூபாய் ஒரு லட்சம் வரை நீண்ட காலம் கடனாக வழங்கப்படும், இந்த நிதியை பெற புலம்பெயர்ந்து சொந்த ஊருக்கு திரும்பிய 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களும், பெண்கள் எனில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், நிதி உதவி பெற தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகம் பழைய தாலுகா அலுவலகம் பீச்ரோடு தூத்துக்குடி என்ற முகவரியிலும், மேலும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படும் வட்டார அலுவலகங்களிலும், நேரிலோ, அல்லது கைபேசியிலோ, தொடர்பு கொள்ளலாம், கைபேசி எண்கள்( 877 822 87 32)( 90 42 71 88 06) என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்


