தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் வந்த காங்கிரஸ் தலைவர் திருநாவுகரரை காங்கிரஸார் வரவேற்றனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.
தமிழக ஆளுநரை பொறுத்தவரை மத்திய அரசு நியமனம் செய்தாலும் கூட அவர் எல்லோருக்கும் பொதுவானவர். இவர் எந்த கட்சியையும் சாராமல் மற்ற கட்சிகளை குறை கூறு£மல் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் தமிழகத்தில் அந்த நிலைபாடு இல்லை எனவே அதை வன்மையாக காங்கிரஸ் கண்டிக்கிறது. தென் இந்திய நதிகளை தூய்மைபடுத்த 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு என்று மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பேசுகிறார். மறுநிமிடம் முதலமைச்சர் இல்லை என்று கூறுகிறார். இதை பார்க்கும் போது பி.ஜே.பியும் அதிமுகவும் தங்களது நன்மைக்கு இணக்கமாக உள்ளார்கள். ஆனால் அவர்கள் மத்திய மாநில அரசாக செயல்படும் போது இணக்கமாக செயல்படவில்லை என தெரிகிறது. அதுதான் இந்த முரன்பாடுக்கு காரணம். மொத்தத்தில் மாநில அரசின் மீது ஏறி மத்திய அரசு செயல்படுகிறது. இதனால் தான் தமிழகம் வளர்ச்சியில் கீழ்நோக்கி செல்கிறது. தற்போது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் இணைந்து கடுமையான சட்டத்தை கொண்டு வரவேண்டும். அப்படி அவர்கள் கொண்டு வந்தால் அதை காங்கிரஸ் வரவேற்கும் என்று அவர் பேசினார். அவருடன் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், கருங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் வந்தனர்.