பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக வீடு கட்டி முடித்த கருங்குளம் ஒன்றியம் சேரகுளம் பஞ்சாயத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.
கிராம சுய ராஜ்ஜிய இயக்கம் கொண்டாட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 14 தேதி முதல் மே 5 ந்தேதி வரை நடந்து வருகிறது.
கருங்குளத்தில் பி.எம்.எஸ். மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குனர் கணபதி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் விநாயக சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் கிரி வரவேற்றார். நிகழ்ச்சியில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய சேரகுளம் பஞ்சாயத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது. கேடயத்தினை ஊராட்சி செயலர் பாரதி பெற்று கொண்டார். இதே போல் ஓட்டபிடாரம் ஒன்றியத்தில் தருவை குளமும், விளத்திகுளம் ஒன்றியத்தில் வேம்பார் பஞ்சாயத்தும் கேடயம் பெற்று கொண்டது. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுவரை பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டிய பயனாளிகள் தங்கள் கருத்துகளை மக்கள் மத்தியில் பகிரிந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா நன்றி கூறினார்.