பாரத பிரதமரின் வானொலி உரையை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் இராமலிங்கம் அறிவுரை மற்றும் ஆலோசனை படி கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட மாணவ மாணவிகள் பாரத பிரதமரின் மனதின் குரல் வானொலி உரையை ஆர்வமுடன் கேட்டனர். பல்வேறு சமுதாய பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வரும் கிள்ளி குளம் வேளாண் கல்லூரி மாணவமாணவிகள் ஜுன் 21 சர்வதேச நான்காம் ஆண்டு யோகா தினத்தை சிறப்புடன் கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் அவரவர் விடுதிகளில் கூட்டமாக அமர்ந்து பொதுவான வானொலியின் மூலம் பாரதப் பிரதமரின் மான்கீ பாத் (மனதின் குரல்) எனும் நம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய யோகா தினத்தின் முக்கியத்துவம் மற்றும் சர்வதேச யோகா தினத்தில் கல்லூரி மாணவர்களின் மகத்தான பங்கு எனும் எழுச்சிமிகு வானொலி உரையை ஆர்வமுடன் கேட்டனர். இந் நிகழ்ச்சியை வேளாண் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் இராஜாபாபு மற்றும் சோபா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.