பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் 72வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை ஜேக்கப் நர்ஸிங் ஹோம் டாக்டர் காலேப் கென் தேசியக்கொடி ஏற்றினார். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, மாறுவேடப்போட்டி நடைபெற்றது. தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கூடுகை நடைபெற்றது. தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் வரவேற்றுப் பேசினார். கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் குறித்து பெற்றோர்கள் கலந்துரையாற்றினர்.
மாணவர்களின் கற்றல் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியை தங்களது சொந்த செலவில் ரூபாய் ஒன்றரை லட்சத்தில் தனித்தனியாக ஸ்மார்ட் வகுப்பறை அமைத்திருப்பது குறித்து பெற்றோர்கள் பாராட்டினர். இவ்வகுப்பறை திறப்பு விழா சிறப்பாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை டாக்டர் காலேப் கென் வழங்கினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. திரளான பெற்றோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பெல்சிபாய் நன்றி கூறினார்.