சாத்தான்குளம் அருகே மாயமான 2 மாணவர்கள், சென்னையில் மீட்கப்பட்டனர்.
சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையை சேர்ந்தவர் அருள்செல்வன். இவரது மகன் கல்யாணஜேக்சன்துரை(15). இவரும் அதே பகுதியை சேர்ந்த செங்கோல்ராஜ் மகன் அருள்(15) என்பவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவர்கள் இருவரும் வீட்டில் வெளியேறி வெளியூர் சென்றனர். மாணவர்களை காணாததால் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ெசன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாயமான மாணவர் கல்யாணஜேக்சன்துரையின் தாய் மரியரேவதி(37) என்பவர் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்கு பதிந்து மாயமான மாணவர்களை தேடி வந்தார். இதனிடையே மாயமான மாணவர்கள் இருவரும் சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் உறவினர்கள் மீட்டனர். பின்னர் அவர்கள் சாத்தான்குளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். படிக்க விருப்பம் இல்லாமல் சென்னைக்கு சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.