கருங்குளம் ஒன்றியத்தில் இலவச பசுமை வீடுகளுக்கு சோலார் மின்கருவி பொறுத்த பணம் பிடித்தம் செய்தும் பொறுத்தவில்லை என பயனாளிகள் புகார் அறிவித்துள்ளனர் .
கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சயாத்துகளில் 2013&14 ஆண்டில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் இலவச வீடுகள் சுமார் 50 கட்டப்பட்டது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டின் மதிப்பு 2,10,000 ஆகும். ஆனால் பயனாளிகளுக்கு ரூபாய் 1,80,000 மட்டுமே வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் சூரிய மின் சக்தி கருவி பொருத்த இணைப்பு வழங்க ரூ30ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு சூரிய மின் சக்தி கருவி பொருத்தப்பட வில்லை.
இது குறித்து தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் கேட்ட போது தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமே மேற்கண்ட நிதியாண்டில் கருவி பொருத்தவில்லை என பதில் கூறியுள்ளார்கள். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே சூரிய மின் சக்தி கருவி பொருத்தவேண்டும் இல்லையென்றால் அந்த பணம் ரூ30 ஆயிரத்தினை திருப்பி தரவேண்டும் என பயனாளிகள் விரும்புகிறார்கள்.
இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.