பங்குனி உத்திர திருவிழா அதிகமான அளவில் தென்மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிகமான சாஸ்தா கோவில்கள் உள்ளது.
இதனால் வெளியூர்களில் இருந்து சாஸ்தா கோவிலுக்கு வரும் பக்தர்கள் கார், வேன், பைக் மற்றும் பேருந்துகளில் அதிகமான அளவில் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி & திருச்செந்தூர் சாலையில் மதியம் 10 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் இருந்து ஆதிச்சநல்லூர் பரம்பு வரையிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் 500க்கும் மேற்பட்ட கார், பேருந்து மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
உடனே தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் மற்றும் செய்துங்கநல்லூர் போலிசார் வாகனங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானதையடுத்து வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றனர்.


