நெல்லை தை பூச மண்டபத்தில் மகா புஷ்கரத்தினை முன்னிட்டு முத்தாலங்–குறிச்சி காமராசு எழுதிய நவீன தாமிரபரணி மஹாத்மியம் நூல் வெளியிட்டு விழா ,வோளாக்குறிச்சி ஆதீன குரு முதல்வர் ஸ்ரீ சத்தியஞானி பிள்ளைத்தமிழ் குறுந்தகடு, தாமிரபரணி ஆரத்தி பாடல் இசை குறுந்தகடு வெளியீட்டு விழாஆகிய முப்பெரும் விழா நடந்தது.
வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பராமாச்சார்ய சுவாமிகள் தலைமை வகித்தார். செங்கோல் மட ஆதீனம் ஸ்ரீலஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தார்.
திருநெல்வேலி இந்து மேல்நிலைப்பள்ளி செயலாளர் செல்லையா வரவேற்று பேசினார்.
தாமிரபரணி மஹாத்மியம் நூலை பொற்கோயில் சக்தி அம்மா நாராயணி அம்மா வெளியிட்டார். நூல் மற்றும் குறுந்தகடுகளை கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானக்குரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், துலாவூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்ப வழகிய தேசிக ஞானப்பிரகாச சுவாமிகள், தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் ஸ்ரீமத் மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் பெற்றனர். மயிலம் பொம்மபுர ஆதீனம் 19 ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், திருப்பாதிரிபுலியூர் ஞானியார் மடம் சுவாமிகள், உமையொருபாக குரு’கள் மம் சிவாச்சாரிய சுவாமிகள், ஓய்வு பெற்ற கலெகடர் ராஜேந்திரன், ஐ.ஜி மாசானமுத்து, காஞ்சிமடம் மேலாளர் நாரயணன், எழுத்தாளர் புலவர் மகாதேவன், வழககறிஞர் மணி வாசகம், சங்கர்நகர் ஸ்ரீஜெயேந்திரா பள்ளி முதல்வர் உஷா ராமன், கணபதி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு, திருமுறை கலாநதி திருத்தணி சுவாமிநாதன், ஸ்ரீஜெயந்திரா பொன்விழா மேல்நிலைப்பள்ளி இசைத்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு பெற்றனர்.
வேளாக்குறிச்சி ஆதீனம் இளவரசு ஸ்ரீஅஜபா நடேஸ்வர சுவாமிகள் நன்றி கூறுகிறார். இதற்கான ஏற்பாடுகளை சங்கர் நகர் தாமிரபரணி புஷ்கர விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
இன்று வெளியிடப்பட உள்ள ‘நவீன தாமிரபரணி மஹாத்மியம்’ நூல் 580 பக்கங்களை கொண்டது. தாமிரபரணி கரையில் உள்ள அனைத்து படித்துறை வரலாறுகளை உள்ளடக்கியது. உலக நதிகள் வரலாற்றில் முதல் முதலாக 150 வீடியோக்களுடன் பார்க்கும் வசதியுடன் உருவாக்கப்பட்ட நூல் . இந்த நூலில் அந்தந்த பக்கத்தில் உள்ள கியூ ஆர். கோடு மூலம் நவீன போனில் ஸ்கேன் செய்து அந்த பகுதியில் எழுதப்பட்ட வரலாற்றை வீடியோவில் பார்க்கும் வசதி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.