நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோட்டார் முருகன்(45). இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்து வந்தார். கடந்த 5ம் தேதி மதியம் பாளையங்கோட்டை அருகே உள்ள இலந்தகுளம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முருகனை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். போலிசார் விசாரனையில் பழிக்கு பலியாக நடந்ததாக தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளை போலிசார் தேடி வந்தனர். இதற்கிடையில் அதே ஊரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மீனாட்சி சுந்தர் (26) இன்று ஸ்ரீவைகுண்டம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை தூத்துக்குடி மாவட்டத்தில் பேரூரணியில் உள்ள சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். போலிசார் அவரை அழைத்து சிறையில் அடைத்தனர்.