நாட்டார்குளம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா வை முன்னிட்டு சப்பர பவனி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தின் 108 வது பங்காக உருவாக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கையோடும் வயல் சார்ந்த பகுதி மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் நாட்டார்குளம் புனித சூசையப்பரின் திருவிழா நடந்தது.
கடந்த 14 ந்தேதி திங்கள் கிழமை மாலை 7 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நற்கருணை ஆசீர் நடந்தது. முன்னாள் பங்கு தந்தை இருதயராஜா கலந்துகொண்டார். அதன்பின் திருவிழா கொடியேற்றம் நடந்தது.
செவ்வாய் கிழமை முதல் தினமும் மாலை 7 மணிக்கு திருபலியும் நற்கருணை ஆசிர்வாதம் மற்றும் ஜெபமாலை நடந்தது. தொடர்ந்து 10 நாள்நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பங்குதந்தை இருதய சாமி, செய்துங்கநல்லூர் பங்கு தந்தை ஆரோக்கிய லாசர் , கள்ளி குளம் ஆங்கில பள்ளி முதல்வர் வின்சென்ட் ஆகியோர் நடத்தினர்.
22 ந்தேதி திருப்பலி நற்கருணை ஆசீர் ஜெபமாலையும் நடந்தது. வள்ளியூர் வி.எம்.எம்.எஸ் இயக்குனர் வழக்கறிஞர் அன்பு செல்வன் இதில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து இரவு 10 மணிக்கு முதல் அதிகாலை 3 மணி வரை சப்பர பவனி நடந்தது. சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை குரு ரெமியூசஸ் பவனியை துவங்கி வைத்தார். சப்பரத்தில் மிக்கேல் அதிதூதர், சூசையப்பர், ஆரோக்கியமாதா. 23 ந்தேதி காலை 10 கிளம்பி 1 மணிக்கு முடிந்தது. மாலை 5 மணிக்கு கொடியிறக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்குளம் பங்கு தந்தை இருதயசாமி, அருட்சகோதரிகள் மற்றும் நாட்டார்குளம் ஊர் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.