நாசரேத்தில் தேசிய மாணவர் படைக்கான சிறப்புத்தேர்வு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நெல்லை 9-வது தமிழ்நாடு அணியின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான எழுத்து மற்றும் செய்முறை தேர்வு நடந்தது. கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிரிஷா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜாண்சன் பால் டேனியல் முன்னிலை வகித்தார்.
சுபைதார் கம்ருதீன், ஹவில்தார் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு அதிகாரிகளாக செயல்பட்டனர். இதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி, பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தேசிய மாணவ,மாணவிகள் 134 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர்கள் ஜெயசீலன், ஜார்ஜ் ராஜதுரை ஆகியோர் செய்திருந்தனர்.