திருநெல்வேலியில் கிறித்துவ மத மாற்றம் தொடங்கிய காலம் 1532 என்று பிஷப் கால்டு வெல் குறிப்பிடுகிறார். திருநெல்வேலி கடற் கரையில் போர்ச்சுகீசியர்கள் குடியேறிய பின்னர் தான் இது தொடங்கியது. அக்காலத்தில் காயல்பட்டினம் மற்றும் சில பகுதிகளில் அப்போது இசுலாமி யர்களின் ஆதிக்கம் நிலவியது. இதனால் சில மீனவர்கள் போர்ச்சுகீசியரின் உதவியை நாடியுள்ளனர். அங்கே கோவா மத குருக்களின் பொதுத் தலைவராக மைக்கேல் வாசு என்பவரால் ஞான நீராட்டு பெற்றனர். இதன் பின்னர் போர்ச்சு கீசியர்களிடம் செய்துகொண்ட உடன்படிக் கையின்படி கடற்கரையிலுள்ள எல்லா மீனவர் களுக்கும் ஞான நீராட்டு செய்யத் தொடங்கினர். மீனவர்களில் பரவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களை மீட்ட போர்ச்சுகீசியரின் சமயத்தைத் தழுவினர்.
இராம நாதபுரம் கடற்கரையை அடுத்துள்ள கிராமங் களிலிருந் தவர்கள் சிலர் சில காரணங்களுக்காக அப்போதும் அடுத்து வந்த 10 ஆண்டுகள் வரையும் அதாவது சேவியர் காலம் வரையும் ஞான நீராட்டுப் பெற வில்லை. ஞானநீராட்டு அளிக்கப்பட்டவர்கள் அக்காலத்தில் பொது வாகக் குமரிக் கிறித்துவர்கள் என்று அழைக்கப் பட்டனர். அவர்கள் 30 கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு மதம் மாறிய 20 ஆயிரம் மக்கள் இருந்தனர். இந்தக் கிராம மக்கள் கன்னியாகுமரியிலிருந்து இராமேசுவரத் தீவு முனை வரை கடற்கரையோரமாக எல்லா இடங்களிலும் அதைத் தாண்டாது அக்கடற்கரைக்குள்ளாகவே விட்டுவிட்டுப் பரவலாக அமைந்திருந்த கிராமங்களில் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்து வந்தனர். அப்பகுதி முதலில் குமரிக் கடற்கரை என்று அழைக்கப்பட்டது. பொதுவாக அங்கு நடை பெறும் புகழ்பெற்ற முத்துக் குளியல் காரணமாக ‘முத்துக்குளியல் கடற்கரை’ அல்லது முத்துக்குளியல்’ என்றே தனியாகவும் அழைக்கப் பட்டது. உள்நாட்டிலிருந்த ஒரு கிராமமும் இந்த இயக்கத்தில் இணைந்ததாகத் தெரியவில்லை. மேலும் ஏசு தொண்டு செய்து வந்த கடற்கரையிலுள்ள மீனவ கிராமங்களில் அவரது சமய போதனை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வில்லை. அவர் பரவர்களின் இரக்கமுள்ள காப்பாளர் என்று விளக்கப்பட்ட போதிலும் சேவியர் அங்கு வருகை தரும் வரையில் அவர்கள் சமய அறிவு சிறிதும் பெறாமலே இருந்ததாகத் தெரிகிறது.
புகழ் வாய்ந்த சமயத் தலைவர் பிரான்சிஸ் சேவியர், திருநெல்வேலி கடற்கரையிலுள்ள பரவர்களிடையே 1542 ஆம் ஆண்டு இறுதியிலே சமய போதனையைத் தொடங்கினார். அங்கு இரண்டு ஆண்டுக் காலமாகப் போதனை செய்து வந்தார். அவர் தனது திட்டமுறையைத் தானே விளக்கி யிருக்கிறார். கடற் கரைக்கு அவர் வந்து சேர்ந்தவுடனேயே சமயக் கோட்பாடு, கடவுள் வணக்கம், மரியன்னை பற்றிய வாழ்த்துக்கள், கிறித்துவ வேதத்திலுள்ள பத்துக் கட்டளைகள் முதலியவற்றை இந்நாட்டு மொழியில் மொழி பெயர்த்தார். நான்கு மாதங்கள் இப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, அவர் கிறித்துவ கிராமமொன்றில் வாழ்ந்து வந்தார். இவ்வாறு இந்நாட்டு மொழி அறிவு பெற்று இளம் உள்நாட்டு மொழிபெயர்ப்பாளர்களுடன் கோவாவில் பயிற்சி பெற்றார். போர்ச்சுகீசு மொழியும் தமிழ் மொழியும் பேசிப் பயின்றார். கையில் மணியுடன் சென்று ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கூட்டத்தைத் திரட்டி அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.
இதன் பலனாக அவர் மீனவ மக்களுக்கு ஞான நீராட்டு செய்து, செய்து கைகளே ஓய்ந்து விட்டதாம். சேவியர் உறுப்பினரா யிருந்த உரோமாபுரி ஏசு சபைக்கு எழுதிய கடிதமொன்றில் அவரது முயற்சிகளைப் பற்றிய விளக்கமான குறிப்பை வரைந்துள்ளார். அக்குறிப்பே அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படுகிறது.
இந்தக் கடிதத்திலிருந்து ஏசுவின் அருளுக்காகக் கூடிய மக்கள் கூட்டம் எவ்வளவு பெரியது என்பதை நீங்களே உணரலாம். மக்கள் கூட்டத்தின் நெருக்கடியை அடிக்கடி சமாளிக்க இயலாது ஞாண நீராட்டு அளித்து அளித்து என் கைகள் ஓய்ந்தன. ஒரே ஒரு நாளில் ஒரு கிராமக்கின் மக்கள் அனைவருக்கும் நான் ஞான நீராட்டு அளித்தேன். மேலும் மதக் கோட்பாடு மற்றும் மதச் செய்திகளை அடிக்கடி திரும்பத் திரும்பக் கூறிக் குரலும் தேய்ந்தது; வலிமையும் குறைந்தது.
ஒரு கிராமத்தில் போதுமான அளவு வேலைகளைச் செய்து முடித்ததும் அடுத்த கிராமத்திற்குச் செல்வேன்; இவ்வாறு முப்பது கிராமங்களுக்கும் சென்று வருவேன்’ என்று சேவியர் கூறுகிறார்
. இவ்வாறு அவர் தீவிரமாகச் செயல்பட்டதால் மற்ற பிரிவினரிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக மதம் மாறியவர்களுக்கும், மற்ற பிரிவினர் களுக்கும் இடையே மோதல்கள் இருந்து வந்துள்ளன. பத்தாண்டுகள் கழித்து இவ்வாறு ஏற்பட்ட மோதலில் சமரசம் செய்ய முயன்ற மத குரு அந்தோணியா கிராமினால் என்பவர் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
போர்ச்சுகீசியர்கள் இவ்வாறு கன்னியாகுமரி முதல் இராமேசுவரம் வரை மதம் மாற்றிய மக்கள் எண்ணிக்கை 90 ஆயிரம் என்று கூறப்படுகிறது. பின்னர் டச்சுக் காரர்கள் தூத்துக்குடி வரை தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தி போர்ச்சுகீசியர்களை விரட்டி அடித்தனர். அதன் பிறகு கிறித்துவ மதப் பிரச்சாரத்தில் டச்சுக்காரர்கள் ஈடுபட்டனர் என்று பிஷப் கால்டுவெல் கூறுகிறார். இவ்வாறு கிறித்துவ மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களில் இராபர்ட் டி நொபிலி, ஸ்டீபன்ஸ், அர்னால்டு, பெஸ்கி (வீரமாமுனிவர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் வந்ததும் ஆங்கிலேய மத குருக்களும் கிறித்துவ மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள் நெல்லைச் சீமையில் மிகவும் பின்தங்கியிருந்த நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள், நாடார்கள் ஆகியோரை கிறித்துவ மதத்தின் பால் ஈர்த்தனர்.
பொதுவாகச் சமூகப் படிநிலைகளில் கீழ்த்தட்டுகளில் துன்பங் களை அனுபவித்து வந்த நலிந்த மக்கள் சமூக சமத்துவ நிலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமாக கிறித்துவத்தைத் தழுவினர். குமரி மாவட்டத்தின் உள்பகுதிகள், பாளையங் கோட்டை போன்ற பகுதிகள் கிறித்துவ மக்கள் அதிகம் வாழும் பகுதிகளாக மாறின.
(நதி வற்றாமல் ஓடும்)


