நண்பர்களே புத்தாண்டு வாழ்த்துக்கள்
பகுதி நேர நிருபராக பயணத்தினை துவங்கிய நான், இன்றுடன் 30 வருடத்தினை முடித்துவிட்டேன். அதற்காக தினகரன் நாளிதழுக்கு நன்றி. இனி முழுநேர எழுத்தாளராக பயணிக்கும் காலம் வந்து விட்டது. எனவே இந்த நவீன யுகத்துக்கு ஏற்ப தொழில் நுட்பங்களை கொண்டு எழுத துவங்க வேண்டும். பத்திரிக்கையில் படிப்பவர் குறைவு என்ற நிலை இருந்தாலும் சமூக வலைதளங்களில் படிப்பவர்கள் அதிகரித்து உள்ளார்கள் என்பது மட்டும் உண்மை. எனவே அவர்களிடம் நமது எழுத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.
எனவே எனது எழுத்து, பத்திரிக்கை செய்தி மற்றும் , பல புதிய எழுத்தாளர்களை அறிமுக படுத்துதல் போன்ற செயல்களை செய்ய நமக்கு தனியாக ஒரு இணைய தளம் தேவை. எனவே இன்று முதல் இந்த இணைய தளத்தினை துவங்கியுள்ளேன்.
அனைவரும் ஆதரவு தரும் படி கேட்டுக்கொள்கிறேன்.
புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பு மிக்க ஆண்டாக அமைய ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்.