தெற்குகாரசேரி கிராமத்தில் சாய்ந்த வாழைக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேரகுளம் சுற்ற பகுதியில் உள்ள தெற்கு காரசேரி குளம், வல்லகுளம், கால்வாய் குளம், வீரளபேரி குளம், அப்பன்குளம் உள்பட குளங்கள் மூலமாக சுமார் 9 லட்சம் வாழைகள் பயிரிடப் பட்டுள்ளன. இங்கு கசலி, மலை ஏத்தம், நாடு, சக்கை, கற்புரவல்லி உள்பட பல ரகங்களில் வாழை பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது இந்த வாழை பயிர்கள் அறுவடைக்கு தாயராகிவிட்ட நிலையில் தீடீர் காற்றால் 50 சதவீதம் வாழை சரிந்து விட்டது.
இது குறித்து தெற்கு காரசேரியை சேர்ந்த விவசாயி சுந்தர் என்பவர் கூறும் போது, நாங்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாழை பயிர் செய்துள்ளோம். வரும் மாதம் முதல் அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. ஒரு தார் ரூ130 வரை வியாபாரிகளுக்கு அடைத்துள்ளோம். ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் அடித்த காற்றில் சுமார் 4 லட்சம் வாழைகள் சாய்ந்து விட்டது. விவசாயிகளின் வாழ்வாதாரம் சரிந்து கிடக்கிறது. எனவே சாய்ந்த வாழைக்கு நஷ்ட ஈடு தர அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தெற்ககாரசேரி கால்வாய் கிராமத்தில் சாய்ந்த வாழைக்கு நிவாரணம் அரசு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.