சாத்தான்குளம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்த பின்பும் மின்விநியோகம் துண்டிக்காததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகர் புதூரில் பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தெற்கு உடைப்பிறப்பு வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் தெற்கு உடைபிறப்பு கோயில் அருகே மின்கம்பத்திலிருந்து விவசாய இணைப்பிற்கு செல்லும் மின் கம்பி தாழ்வாக தொங்கி கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 10 ஆம்தேதி அந்த வழியாக விறகு ஏற்றிச் சென்ற வாகனத்தில் சிக்கி மின்கம்பிஅறுந்து விழுந்தது. இதையடுத்து கிராமத்து இளைஞர்கள் அறுந்து விழுந்த மின் கம்பியை மின்கம்பத்தில் உயரமான இடத்தில் கட்டி வைத்தனர். ஆனாலும் அந்த கம்பியில் மின் இணைப்பு துண்டிக்கப்படால் உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை சீரமைக்கபடவில்லை.
ஆதலால் மீண்டும் மின்கம்பி அறுந்து விழுந்து உயர் பலிலி நிகழும் முன், மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இதனை பார்வையிட்டு துண்டிக்கப்பட்ட மின்கம்பியை சீரமைத்து முறையாக மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.