
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வடகால் பாசனம் தூத்துக்குடி கீலக்கால் பாசன வசதிக்காக சிவத்தையாபுரம் வெள்ளூர் சுற்று வட்டார கிராம விவசாய பிரதிநிதிகள் நடப்பில் திறந்துவிடப்பட்ட 650 கணஅடி தண்ணீர் வரத்தால் முழுமையாக விவசாய பணிகள் நடைபெறவில்லை எனவும் 1000 கண அடி தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதுசம்பந்தமாக 20 ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அவர்களை சந்தித்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வேண்டுகோள் விடுத்தார். உடனே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை வைக்க கூறினார். தாமும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்தார்.இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தூத்துக்குடி வடகால் பாசனம் தூத்துக்குடி கீலக்கால் பாசன வசதிக்காக திறந்துவிடும் தண்ணீர் அளவை உயர்த்தி தர வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடி மாவட்ட விவசாய பணிகளை கருத்தில் கொண்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி , எம்.எல்,ஏ சண்முகநாதன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று 20 ம் தேதி மாலையே 1000 கண அடி தண்ணீர் திறந்து விட உத்திரவிட்டார்.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வடகால் பாசனம் தூத்துக்குடி கீலக்கால் பாசன வசதி பெரும் சிவத்தையாபுரம் வெள்ளூர் சுற்று வட்டார கிராம விவசாயிகள் மகிழ்ச்சியடைந்ததோடு இருமாவட்ட ஆட்சியர்களுக்கும் இதற்க்கு உடனடி தீர்வு கண்ட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.